ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின், கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய மக்களின் பிரச்சனைகளை நேரடியாகச் சென்று மக்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் முகமாக ‘கிராமத்துடன் உரையாடல்’ வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.இதுவரை ஜனாதிபதியின் கிராமத்துடனான உரையாடல் நிகழ்ச்சித் திட்டம் தென்பகுதியில் இடம்பெற்று வந்த நிலையில்,
முதன் முறையாக, வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களில் ஒன்றான, கலாபோகஸ்வேவ கிராமத்திற்கு அவர் வருகை தந்து அப்பகுதி மக்களுடன் உரையாடவுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின், வடபகுதி நோக்கி இடம்பெறும் முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது