கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கேரளாவில் நாளை பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம்

கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கேரளாவில் நாளை பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம்

கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். கேரள மாநிலத்தில் 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா கட்சி போட்டியிடுகிறது.பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பிரசாரம் செய்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை மீண்டும் கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் கோணி தொகுதியில் மாநில பாரதிய ஜனதா தலைவர் கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரதமர் மோடி நாளை மதியம் புறாமடம் என்ற இடத்தில் பிரசாரம் செய்கிறார்.பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு மாலை 4 மணிக்கு நேமம் தொகுதியில் போட்டியிடும் கும்மனம் ராஜசேகரனை ஆதரித்து காரியவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதுபோல் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் கலந்து கொண்டு பாரதிய ஜனதா வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார். மேலும் ரோடுஷோ நிகழ்ச்சியும் நடத்துகிறார்.பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரின் கேரள வருகையால் மாநிலத்திலுள்ள பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *