இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின்போது 3 தேவாலயங்கள் மற்றும் சில நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்கள் நடத்தினர்.இந்த தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டது உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல்கள் நடந்து 2 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இன்று ஈஸ்டர் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இந்த பண்டிகை நாளில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடாதபடி கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தேவாலயங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.