கொரோனா வைரஸ் தொற்றுநோயால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட ஏராளமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.இந்தநிலையில் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அழைத்துவர அரசு நடவடிக்கை எடுத்தது.இவ்வாறு திரும்பிவர தயாராக உள்ளவர்கள் மற்றும் சொந்த செலவில் திரும்பத் தயாராக உள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைய வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியைப் பெற அறிவுறுத்தப்பட்டனர்.
எனினும், வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு இதுபோன்ற அனுமதி தேவையில்லை என்று கொவிட் செயலணி அறிவித்துள்ளது.இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.