இலங்கையில் நேற்று முதல் பாம் ஓயில் இறக்குமதி செய்ய தடை விதிக்க ஜனாதிபதி எடுத்த உடனடி முடிவு பேக்கரி தொழிற்துறையை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சங்கத்தின் தலைவர் என்.கே ஜெயவர்தன ஜனாதிபதியின் இந்த உடனடி முடிவு பேக்கரி துறையில் திடீர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து பேக்கரி தயாரிப்புகளுக்கும் மாவு, சர்க்கரை, முட்டை மற்றும் வெண்ணெய் போன்ற நான்கு முக்கிய பொருட்கள் தேவைப்படுகின்றன. பாம் ஓயில் வெண்ணெயை தயாரிக்க பயன்படுகிறது, இப்போது சந்தையில் வெண்ணெயை கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார்.”உடனடி முடிவை எடுப்பதற்கு முன், மக்கள் பயன்படுத்த எண்ணெய்க்கு பதிலாக ஒரு மாற்று அல்லது மாற்றீட்டை ஜனாதிபதி முன்மொழிந்திருக்க வேண்டும். இன்று முதல், எங்கள் பேக்கரி தொழிற்துறையைத் தொடர முடியாது” என்று அவர் தெரிவித்தார்.
“இது ஒரு நடைமுறை நடவடிக்கை அல்ல, அத்தகைய முடிவை எடுக்க ஜனாதிபதிக்கு யார் ஆலோசனை வழங்கினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இது எந்தவொரு வெற்றியையும் தராது. இந்த தடையால் நாட்டில் உள்ள அனைத்து பேக்கரிகள், பிஸ்கட் உற்பத்தியாளர்கள் மற்றும் இனிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும், மேலும் 100,000 க்கும் அதிகமானவர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வார்கள், ”என்று ஜெயவர்த்தன தெரிவித்தார்.
பேக்கரி துறையில் சுமார் 30 முதல் 40 மெட்ரிக் தொன் பாம் ஓயில் பயன்படுத்தப்படுகிறது, இது அரசாங்கத்திற்கு பெரும் வருவாயை அளிக்கிறது . எனினும், இந்த கடினமான முடிவுக்கு வருவதற்கு முன்பு ஒரு மாற்று முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.”60 வீத பாம் ஓயில் உலகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 5 வீத தேங்காய் எண்ணெய் மட்டுமே சந்தையில் கிடைக்கிறது, இது பேக்கரி தொழிற்துறையை சிறிது நேரத்தில் கூட நடத்த போதுமானதாக இல்லை” என்று ஜெயவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.