பன்னிபிட்டி பகுதியில் பாரவூர்தி சாரதி மீது கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மகரகம போக்குவரத்து பிரிவுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிளை ரூ .500,000 இலட்சம் பிணையில் விடுவிக்க நுகேகொட தலைமை நீதவான் நேற்று (5) உத்தரவிட்டார்.என். ரிப்தீன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சந்தேகநபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகரகம போக்குவரத்து சார்ஜன்ட் விக்ரமதுங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முந்தைய விசாரணையின்போது சந்தேக நபர் தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும், அடுத்த விசாரணையில் அறிக்கையை சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சார்ஜன்ட் விக்ரமதுங்க மேலும் தெரிவித்தார்.
சந்தேகநபருக்காக ஆஜரான சட்டத்தரணிகள் வசந்தா ரணசிங்க மற்றும் பிரதீப் சில்வா ஆகியோர், தாக்குதலுக்கு உள்ளான சாரதிக்கு சிறிய கீறல்கள் மட்டுமே இருப்பதாகவும், வழக்கை தீர்ப்பதற்கு இரு தரப்பினரும் அவரை பிணையில் விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினர்.வாதிகள் மற்றும் பிரதிவாதிகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், சந்தேக நபரை பிணையில் விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இந்த சம்பவத்தில் பதுளையில் வசிக்கும் தமிழரான பிரவீன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியமை குறிப்பிடத்தக்கது.