அமெரிக்காவின் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.), வெளியிட்டுள்ள வருடாந்திர உலக பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையில், நடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரை, இந்த ஆண்டு 12.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்துள்ளது.
ஆனால், சீனாவின் பொருளாதார வளர்ச்சியே இந்த ஆண்டில் 8.6 சதவீதம்தான் இருக்கும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. எனவே, இந்த ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி, சீனாவை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த ஆண்டு, இந்திய பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், சீன பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாகவும் இருக்கும் என்று இந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது.