பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் .

பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் .

பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.வர்த்தமானிக்காக மேலும் இரண்டு பட்டியல்கள் தொகுக்கப்பட்டு வருவதாக அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது,அதில் குறிப்பாக, ஊதப்பட்ட பொம்மைகள் சச்செட் பக்கட்டுகள் (sachet packets) மற்றும் பிளாஸ்டிக் தண்டுகளுடன் கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி முதல், இலங்கையில 20 மில்லி அல்லது 20 கிராம் மற்றும் அதற்கும் குறைவான சச்செட்டுகளைப் (sachet) பயன்படுத்து தடை செய்யப்பட்டுள்ளது. (உணவு மற்றும் மருந்துகளை பொதி செய்வதைத் தவிர) அத்துடன் ஊதப்பட்ட பொம்மைகள் (பலூன்கள், பந்துகள், நீர் மிதக்கும் ஃ பூல் பொம்மைகள் மற்றும் நீர் விளையாட்டு கியர் தவிர) மற்றும் பிளாஸ்டிக் தண்டுகளுடன் கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு (மருத்துவ, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டவை தவிர) தடைசெய்யப்பட்டுள்ளன என அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *