ஆளும் அரசின் பங்காளி கட்சித் தலைவர்களுடன் அவசர சந்திப்பை நடத்தியுள்ள ஜனாதிபதி மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசிலுள்ள பங்காளிக்கட்சிகள் ஒன்று கூடிப்பேசுவதில் தவறு இல்லை. ஆனால் அந்தச் சந்திப்புக்கள் எதிரணியின் சூழ்ச்சிகளுக்கு துணை போகக்கூடாது.
பொதுஜனபெரமுனவின் பலம்மிக்க தலைவராக பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளார்.பங்காளிக்கட்சிகள் தமது குறைநிறைகளை அவருடன் பேசித்தீர்த்துக் கொள்ள முடியும்.நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் இந்த ஆட்சி அமைக்கப்பட்டது.எனவே இதனைக் கவிழ்ப்பதற்கு எவரும் இடமளிக்கக்கூடாது.
மக்களின் ஆணையை மீறி நடப்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போவார்கள்.இது கடந்த கால வரலாறு.எனவே எதிரணியின் முயற்சிகளை நாம் ஓரணியில் தோற்கடிக்கவேண்டும் என்றார்.இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் கடந்த வியாழக்கிழமை அரசுக்கு ஆதரவு வழங்கும் பங்காளி கட்சிகள் விசேட சந்திப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.