உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கூட, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்புக் காட்டி வருகின்றன.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.05 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 14,05,11,425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 11,93,99,366 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30 லட்சத்து 12 ஆயிரத்து 007 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 1,81,00,052 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,07,017 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – பாதிப்பு- 3,23,05,912, உயிரிழப்பு – 5,79,942, குணமடைந்தோர் – 2,48,36,187
இந்தியா – பாதிப்பு- 1,45,21,683, உயிரிழப்பு – 1,75,673, குணமடைந்தோர் – 1,26,66,889
பிரேசில் – பாதிப்பு- 1,38,34,342, உயிரிழப்பு – 3,69,024, குணமடைந்தோர் – 1,22,98,863
பிரான்ஸ் – பாதிப்பு – 52,24,321, உயிரிழப்பு – 1,00,404, குணமடைந்தோர் – 40,46,205
ரஷ்யா – பாதிப்பு – 46,84,148, உயிரிழப்பு – 1,04,795, குணமடைந்தோர் – 43,10,557
தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-
இங்கிலாந்து – 43,83,572
துருக்கி – 41,50,039
இத்தாலி – 38,42,079
ஸ்பெயின் – 34,07,283
ஜெர்மனி – 31,16,950போலந்து – 26,60,088
அர்ஜெண்டினா- 26,58,628
கொலம்பியா – 26,19,422
மெக்சிக்கோ – 22,99,939
ஈரான் – 21,94,133