கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த மேல் மாகாண தஹம் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.தஹம் பாடசாலை நடவடிக்கைகள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பௌத்த விவகாரங்கள் திணைக்களம் கூறியுள்ளது.அதன்படி, அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் ஒருவருக்கொருவர் தூரத்தை பராமரிப்பது கட்டாயமாகும்.மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாவது தவணைக்காக நாளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதை தெரிவித்தார்.