பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊரான தங்காலையிலும் மற்றும் நுவர எலியாவிலும் புதுவருட நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையிலேயே கொழும்புக்கு திரும்கிறார்.முருத்தட்டுவே ஆனந்த தேரர், மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசி கலந்துரையாடல் நடத்திய பின்னரே பிரதமர் கொழும்பு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே முருத்தட்டுவே ஆனந்த தேரர், மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு யோசனை நிறைவேற்றப்பட்டால் துறைமுக நகரம் ‘சீன குடியிருப்பாக மாறும் என்று விஜயதாச ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்ச அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக முறையிடப்பட்டுள்ளது.இதேவேளை கட்சியின் யாப்பை மீறினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் விஜயதாச ராஜபக்சவின் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.