கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் கடும் விமர்சனத்தை மேற்கொண்ட அபயராமய விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர், திடீரென வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.10 தேரர்களுடன் அவர் நேற்று இரவு பாகிஸ்தான் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.சுமார் ஒருவாரத்திற்கு அவர் அங்கு தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுகம், 20ஆவது திருத்தம், போர்ட் சிட்டி என அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளை பகிரங்கமாக விமர்சித்துவந்த அவர், அண்மையில் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருடன் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.