அரசாங்கத்தின் கொள்கையின்படி அரிசி இறக்குமதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசின் கொள்கையின்படி அரசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது. இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டார். அவ்வாறு அரிசி இறக்குமதி செய்ய ஜனாதிபதி அனுமதித்தால் அரிசியின் விலையை எளிதில் குறைக்க முடியும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், புத்தாண்டு காலத்தில், நாடு மற்றும் சிவப்பு அரிசி 100 ரூபாய்க்கும் குறைவாக வழங்க முடிந்ததாகவும் , சம்பாவின் விலையை மட்டும் கட்டுப்படுத்த முடியாது போனதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.