Bitcoin என்றால் என்ன? அதில் Blockchain என கூறப்படுவது என்ன?

Bitcoin என்றால் என்ன? அதில் Blockchain என கூறப்படுவது என்ன?

Bitcoin என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, Blockchain என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி சில விவரங்களை எளிமையாக இங்கே பார்க்கலாம்.

பிட்காயின் (Bitcoin) தான் உலகின் முதல் பிரவலாக்கப்பட்ட (Decentralized) டிஜிட்டல் நாணயம் ஆகும். இது கணினி முறையால் வலைத்தளங்களில் செயலாக்கப்பட்டு, பரிமாற்றம் செய்யப்படுகின்றது.பிட்காயின் (BTC) என்பது Blockchain என்று அழைக்கப் படும் ஒரு வகை கணினி தொழில் நுட்ப முறையில் இயங்குகிறது. நாம் அன்றாட வாழக்கையில் பயன்படுத்தும் பணம் போல, இந்த கிரிப்டோ நாணயத்தை வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம், பொருட்களை வாங்கலாம், வர்த்தகத்திற்குபயன்படுத்தலாம் மற்றும் சேமித்து வைக்கலாம்.

இந்த பிட்காயினில் பல நன்மைகள் (advantages) உள்ளன. நாம் பயன்படுத்தும் பணம் ஒரு வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப் படுகின்றது. ஆனால், பிட்காயின் என்ற இந்த கிரிப்டோ நாணயம் (Cryptocurrency) எந்த வங்கியாலும் மேற்பார்வை செய்யப்படுவது இல்லை, கட்டுப்படுத்தப்படுவதும் இல்லைஅப்படியென்றால், இந்த நாணயத்தை வர்த்தகம் செய்ய எந்த வங்கிக்கும் நாம் செல்ல வேண்டியதில்லை. அதனால், பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் மிக மிக குறைவு.

வங்கிகளுக்கு பதிலாக, இந்த நாணயம் Blockchain என்ற மென்பொருளால் ஆன வரவுப் பதிவேட்டில் (ledger) சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றது.அப்படியெனில், இதில் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது, உங்கள் கணக்கை (Account) வாங்கி போன்று அந்த நிறுவனத்தால் யாராலும் முடக்க முடியாது.

அதே சமயம், இதனை உலகம் முழுக்க ஒரே மாதியான முறையில், கட்டணத்தில் பரிமாற்றிக் கொள்ளலாம். பிட்காயினை வைத்துக் கொண்டு, டொலர், ரூபாய் போன்ற பணத்தையம் வாங்கலாம், மற்ற பொருட்களையும் வாங்கலாம்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *