“Live your life. It’s Yours Anyway. Don’t try too Hard. It’s ok to lose”.இதை போல் பல motivation களை கூறி மற்றவர்களை ஊக்கப்படுத்தியவர்கள் BTS. யார் இந்த BTS ? உலகப்புகழ் பெற்றவர்கள்.இவர்கள் உலகப்புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் இந்த உச்சத்தை தொடுவதற்கு பல கஷ்டங்களை அனுபவித்துள்ளனர்.
Bts என்பதன் அர்த்தம் Bangtan Sonyendan, Bangtan என்றால் Bulletproof என்றும் Sonyendan என்றால் Group of boys என்றும் அர்த்தம். ஆகவே இவர்கள் Group of Bullet proof boys எனவும் அழைக்கப்படுவார்கள். இந்த பெயரிற்கு BTS கூறிய அர்த்தம் என்னவென்றால் சமூக அநீதிகளை BTS பாதுகாப்பு கவசமாக இருந்து தட்டிக் கேட்போம். அது மட்டுமன்றி இளைஞர்களுக்கு தங்களது(BTS) பாடல்களின் மூலம் நல்ல கருத்துக்களை கூறுவோம் என கூறியிருந்தனர். அதேபோல் தான் செய்தும் வருகின்றனர். தென் கொரியாவில் 2010 ல் 07 பேர் இணைந்து தொடங்கிய இசைக்குழுவே BTS. Rm ,Suga, J-hope, Jin,Jimin, V, Jungkook என்று மொத்தம் 07 பேர் கொண்ட K-pop எனப்படும் இசைக்குழுவே BTS. 2013ல் இவர்கள் தங்கள் பாடல்களை வெளியிட தொடங்கினர். இவர்களின் அனைத்து பாடல்களும் Hit ஆகியது. அது மட்டுமன்றி இவர்களது அனைத்து பாடல்களும் பிரம்மாண்டமான வசுலை பெற்றது.
இவர்கள் மக்களுக்கு எது தேவையோ அதை பாடினார்கள். மனித உறவு, சமூகம் போன்றவற்றை சார்ந்தவாறு மற்றும் இவர்களது பாடல் ஒவ்வொன்றும் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மற்றும் இவர்கள் தங்கள் பாடல்கள மூலம் Love Your Self என்ற ஒரு கருத்தையும் முன்வைத்து பல மக்களின் மனதில் இடம் பிடித்தனர். இவர்களது ரசிகர்கள் ARMY எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார் . BTS காக எதையும் செய்ய கூடியவர்கள் Armies. BTSக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அவர்களை பாதுகாக்கும் கவசமாக இருப்பார்கள். அந்த வகையில் ARMY என்பதன் அர்த்தம் Adorable Representative M.C For Youth. BTS இன் Armies மொத்த எண்ணிக்கை 40.8 million Fans என எடுத்துக்கொண்டால் பல கோடிகளை தாண்டும். இவர்களின்(BTS) சாதனைகள் எண்ணிலடங்காதவை. வெளியான 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட YouTube என கின்னஸ் சாதனை மட்டுமே 11 பெற்றிருக்கின்றார்கள். அமேரிக்காவின் உயரிய விருதில் ஒன்றான “Billboard Music Award”இல் தொடங்கி பல விருதுகளை குவித்த வண்ணம் இருக்கின்றார்கள். அது மட்டுமன்றி ஐ.நா சபையில் பல தலைவர்கள் முன்னிலையில் முதல் முறை பாடல் பாடி நடனமாடிய பெருமையும் BTS ஐ சேரும். அனைவர்களது சாதனையையும் BTS முறியடித்தனர்.
BTS இவ்வாறு சாதனைகள் மட்டுமன்றி பல மக்களுக்கு உதவியும் செய்கின்றார்கள். குழந்தைகளின் நலன், அவர்களுக்கு நடக்கும் பாலியல் பிரச்சினைகள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,என பல மக்களுக்கு பல விதமான உதவிகளை செய்து வருகின்றனர். அது மட்டுமன்றி BTS தங்கள் Armies இடம் நாங்கள் எவ்வாறு பிறருக்கு உதவி செய்கின்றோமோ அதே போல் நீங்களும் பிறருக்கு உதவி செய்யுங்கள் என கூறினர். Armies உம் BTS கூறியவாறே உலகம் முழுவதும் பல உதவிகளை செய்து வருகின்றனர். காது கேட்க முடியாதவர்களை கூட தங்கள் இசையால் கவர்ந்தவர்கள் BTS. இசைக்கு மொழி அவசியமில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் BTS. இந்த 07 பேரின் குரலிலுமே ஒரு வகை போதை இருக்கும். இதில் இருக்கும் 07 பேருமே பல கஷ்டங்களை சந்தித்துள்ளனர். விடா முயற்சி வெற்றி தரும் என்பதற்கு உதாரணம் BTS. சிறு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை தங்கள் பாடல்களால் BTS அவர்களது மனதை கட்டிப் போட்டனர். BTS தங்கள் பாடல்களால் பல பேரின் வாழ்க்கையை மாற்றினர். நான் உயிர் வாழ்வதற்கே காரணம் BTS தான் என கூறும் அளவிற்கு BTS அவர்களது வாழ்க்கையை மாற்றியுள்ளனர். BTS கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மாற்றவர்களின் வாழ்க்கையை மாற்றுகின்றது. அது மட்டுமன்றி அவர்களை அவர்களே நேசிக்க கற்றுக்கொடுத்தனர். இவ்வாறு தங்கள் பாடல்கள் மூலம் மேலும் பலரின் வாழ்க்கையில் ஒரு Motivation ஐ கொடுப்பதற்கு BTS தயாராக இருக்கின்றனர். நாமும் எமது வாழ்க்கையை நமக்கு பிடித்தது போல் வாழ்வோம். Love Your Self Speak Your Self.
BTS 07 பேரின் கதை பாகம் 02 இல்
by Srilankan Tamil BTS ARMY Lukshi OT7
12 Comments