திறமையே உனக்கான ஆதரவு என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு BTS .இந்த கெபோப் குழு 2010 ஆம் ஆண்டில் குழுவாக்கப்பட்டு 3 வருட கடின பயிற்சிகளின் பின் முதன் முதலில் 2013 ஆம் ஆண்டில் ‘2 cool 4 skool’ என்ற single album ஐ வெளியிட்டனர். இது மில்லியன் கணக்கான views and likes ஐப் பெற்றுக்கொடுத்தது.அது மட்டுமின்றி அவர்கள் தான் இன்று K-pop இலேயே Number 1 ஆக உள்ளனர். 24 மணித்தியாலங்களில் அதிகமான views BTS பாடல் பெற்றிருக்கிறது.இது ஒரு Guinness record ஆகும். முதல் முதலில் bts இன் ‘DNA’ பாடலே 24 மணித்தியாலங்களில் அதிக views ஐப் பெற்றுக் கொடுத்தது.அதன் பின் ‘Idol’, ‘Boy with love’ போன்ற பாடல்களும் பெற்றுக்கொண்டது. மேலும் அவர்களே அவர்களுடைய world records ஐ முறியடிக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர்.இது போல அவர்கள் இன்று வரையிலும் 23 Guinness world records ஐ நிகழ்த்தியுள்ளனர். இவர்கள் தான் ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முதலில் பாடல் பாடி நடனமாடிய இசைக்குழுவாகவும் காணப்படுகிறது.
இவர்களுடைய சாதனைகள் கொஞ்சம் அல்ல இமயத்தை தொடும் அளவு பெரியவை 376 விருதுகள் 572 விருதுப் பதிவுகள் 23 கின்னஸ் சாதனைகள் , மேற்கத்திய நாடுகளில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பாடல்கள், அமெரிக்கா மேடையில் முதன்முதலாக இடம்பெற்ற தென் கொரியாவின் நடன நிகழ்ச்சி, உலகில் முதல் முதலாக கணக்கெடுக்க முடியாத அளவு இணைய பதிவுகள் பெற்ற முதல் இசைக்குழு, முதன்முதலில் ஐநாவில் பேசிய இசைக்குழுவினர் ஐநா அவையில் பிடிஎஸ்சின் தலைவர் kim Namjoon (RM) உடைய பேச்சு உலக மக்களை திருப்ப பார்க்க வைத்தது ” உங்களுடைய நிறம் என்ன உங்களுடைய அடையாளம் என்ன எதுவுமே தேவையில்லை உங்களுடைய குரலில் உங்களுக்காக நாங்கள் உங்கள் குரலைக் கேட்க வேண்டும் நாங்கள் நாங்களும் பயங்கள் பல தவறுகளுக்கும் அப்பால் தங்களைத் திருத்திக்கொண்டு முன் வந்து உங்களை விரும்பி கொண்டு முன் வந்துள்ளோம் இந்த இடத்திற்கு அவ்வாறு நீங்களும் உங்களை விரும்பி உங்கள் அடையாளத்தை உருவாக்க வேண்டும் நீங்கள் நீங்களாகவே கதையுங்கள்” என்ற மையக்கருத்தை உடைய இந்த பேச்சானது வீட்டில் இசை தெரியாத அனைவருக்கும் தெரிய வைத்தது.
இவர்களுடைய சாதனையை பகிர்ந்துகொள்ள இவர்களுக்கு மட்டுமே தகுதி உண்டு இவர்களுடைய பாடல்களும் சரி நடனங்களும் சரி இவர்களில் இருக்கும் உறுப்பினர்களையே தயாரிக்கபடுகிறது. பாடல் வரிகள் rm, suga நடன வடிவமைப்புகள் jhope ,jimin, jk பாடல்கள் v, jin, jk, jimin ராப் பாடல்கள் rm, jhope, suga இசையமைப்பு jk ,rm ,suga பிடிஎஸ்க்கு உரிய உணவுகள் jinனினாலும் தயாரிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவருமே ஒரே குடும்பம் போன்று ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள் ஒவ்வொரு வீட்டு வேலைகளை ஒவ்வொருத்தராக பிரித்து அவ்வாறு 2013ல் செய்யப்பட்டார்கள் அவ்வாறே இன்றும் செயல்பட்டு வருகிறார்கள் இவர்களில் இருந்த நட்பு இன்று மென்மேலும் வளர்ச்சி கண்டு ஒரு குடும்பமாக உருவெடுத்துள்ளது இவர்களை இசைக்குழு பயணத்தின் நிறுத்துமாறு பல மிரட்டல் கடிதங்களும் மிரட்டல் அழைப்புகளும் வந்தபோதும் யாருமே சலைக்காமல் இன்றும் இந்த தொடர்ச்சியான பயணத்தில் நீடித்து நின்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் இன்று பிரபல்யம் அடைவதற்கு அவர்களின் திறமைகளும் எண்ணற்ற தியாகங்களும் அவமானங்களுமே படியாக இருந்தது. ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைப்பது கூட கேள்விக்குறியாக இருந்தது.அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தவர்கள் கூட அவார்களின் திறமைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் அவர்களைப் புறக்கணித்தனர். நீங்கள் பெண்களைப் போல இருக்கின்றீர்கள், உங்களால் சாதிக்க முடியாது என்றெல்லாம் கூறி அவர்களை அவமானப்படுத்தினர். ஆனால் அது எதையும் பொருட்படுத்தாமல் என்ன தான் துயரம் வந்தாலும் ‘Don’t cry, Just try’ எனும் வார்த்தையை தங்களுக்குள் கூறி, இன்று அவர்களுடைய திறமையை உலகமே திரும்பிப் பார்க்கும் படி செய்துவிட்டார்கள் BTS
BTS இன்று இவ்வாறு பிரபல்யமாக இருப்பதற்கு அவர்களின் திறமைகளும் எண்ணற்ற தியாகங்களும் அவமானங்களுமே படியாக இருந்தது. ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைப்பது கூட கேள்விக்குறியாக இருந்தது.அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தவர்கள் கூட அவர்களின் திறமைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் அவர்களைப் புறக்கணித்தனர். நீங்கள் பெண்களைப் போல இருக்கின்றீர்கள், உங்களால் சாதிக்க முடியாது என்றெல்லாம் கூறி அவர்களை அவமானப்படுத்தினர். ஆனால் அது எதையும் இவர்கள் பொருட்படுத்தாமல் இன்று உலகமே பேசும் அளவுக்கு சாதித்துள்ளார்கள் என்றால் அதற்காக அவர்கள் 7 பேருமே பல தடைகளைக் கடந்துள்ளனர்.
BTS 07 பேரின் கதை பாகம் 03இல் தொடரும் 𝑩𝒚:SRILANKAN TAMIL BTS ARMY 𝑭𝒂𝒕𝒉𝒊𝒎𝒂 𝑯𝒖𝒔𝒍𝒂
4 Comments