புதிதாக மேலும் எட்டு Omicron கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பிரித்தானியாவில் ஓமிக்ரோன் கொரோனா நோயால் பாதிக்கப்படு இருப்பவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சூழலில், இன்று செவ்வாய்க்கிழமை (30) பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (boris Johnson) தெரிவிக்கையில், கொரோனா பரவல் காரணமாக புதிதாக நாடு முடக்கப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ளார்.
Omicron கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக உலகம் முழுவதும் பலர் கலக்கம் அடைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவும் திறன் பெற்று இருப்பதே ஆகும்.மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளும் நோய் எதிர்ப்பு சக்கிதிகள் இந்த வகை புதிய வைரஸுக்கு எதிராக திறன்பட செயல்படாது என்று நம்பப்படுவது ஆகும்