ஒமிக்ரோன் வைரஸ் பரவும் தன்மை குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸின் Omicron மாறுபாடு டெல்டா தொற்றை விட அதிகமாக பரவுகிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
இன்று (07) செவ்வாய்க்கிழமை காலை அமைச்சரவைக் கூட்டத்தில் சமீபத்திய கொரோனா நிலைமை குறித்து தனது அமைச்சர்கள் குழுவைப் புதுப்பித்தபோது போரிஸ் ஜான்சன் இதனை தெரிவித்தார்.
மேலும், Omicron வைரஸ் குறித்து ஆய்வுகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அதன் பண்பு குறித்து ஒரு முடிவுக்கு வர முடியாது. ஆனால் இது டெல்டா தொற்றை விட அதிகமாக பரவக்கூடியது என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருக்கின்றன என்று கூட்டத்தில் பிரதமர் கூறியதாக அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, ‘பிளான் பி’ நடவடிக்கைகளை கொண்டு வரலாமா என்பது குறித்து பிரதமரின் உயர்மட்ட குழுவில் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மேலும், பிரித்தானியாவில் திங்கட்கிழமை வரை மொத்தம் 336 Omicron தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் 261பேர், ஸ்காட்லா்நது 71பேர் மற்றும் வேல்ஸில் 4 பேர் தொற்றால் பாதிக்க்பட்டுள்ளனர்.